எரிபொருளுக்காக மூன்று நாள் வீதியில் காத்துகிடக்கும் மக்கள்(Video)
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று(26) பொதுமக்களுக்கு நேர்த்தியான முறையில் மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெற்றுள்ளது.
இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்களுக்கு அனுமதி துண்டு வழங்கப்பட்டு ஒருவருக்கு 5 லீட்டர் வீதமும், கடற்றொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு 20 லீட்டர் வீதமும் வழங்கப்பட்டுள்ளது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கண்காணிப்பின் கீழ் பாதுகாப்பு பிரிவினரின் பாதுகாப்புடன் மக்கள் அனைவருக்கம் கிடைக்கும் வகையில் மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெற்றுள்ளது.
அறுவடை காலம்
வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசத்தில் விவசாய செய்கையின் அறுவடை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் அறுவடைக்கு டீசல் இன்மை பெரும் பிரச்சினையாக உள்ளது.
இதனால் உழவு இயந்திர உரிமையாளர்கள், விவசாயிகள், வாகன தொழிலாளர்கள் டீசல் பெறுவதற்காகவும், முச்சக்கரவண்டி தொழிலாளர்கள் பெட்ரோல் பெறுவதற்காகவும் சுமார் மூன்று நாட்களுக்கு மேல் வாகனங்களுடன் காத்து கிடக்கும் நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு டீசல் வழங்காமல் விவசாய அறுவடை நடைபெறாதவிடத்து விவசாயத்தினை முற்றாக யானை அழித்துவிடும் என்ற அச்சத்துடன் விவாயிகள் தினமும் ஏங்கிக் கொண்டிருப்பதாக கவலை தெரிவித்துள்ளனர்.
வரிசையில் மக்கள்
எரிபொருள் பெறுவதற்காக மூன்று நாட்களாக வாகனங்களை வீதியோரங்களில் நிறுத்தி வைத்து வாகனத்தின் காவலுக்காக உணவுக்கு செல்ல முடியாமல் மக்கள் இருந்து வருகின்றனர்.
மேலும் வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுதைவதையும், பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
