இரண்டாவது தடுப்பூசிக்காக காத்திருக்கும் மக்கள்
மருத்துவர்கள், நிபுணர்கள் நாட்டை மூடுமாறு கோருகின்ற போதிலும் கோவிட் ஒழிப்பு ஜனாதிபதி செயலணிக் குழுவும் அரசாங்கமும் நாட்டை மூடுவதற்கு இன்னும் தயாரில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி இந்த தொற்று நோயிக்கு ஒரே தீர்வாக இருந்தாலும் தடுப்பூசி வழங்கி முடிக்கப்படும் வரை நாட்டை மூடாது போனால், பயங்கரமான நிலைமை ஏற்படக் கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கண்டி மாவட்டத்தில் மக்களுக்கு முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டிருந்தாலும் இரண்டாவது தடுப்பூசி வழங்கும் தினம் சம்பந்தமான இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.
இதனால், முதலாவது தடுப்பூசி செலுத்திக்கொண்ட கண்டி மக்கள் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படும் வரை நீண்டகாலமாக காத்திருக்கின்றனர்.
மருத்துவர்களின் கருத்துக்கு அமைய டெல்டா திரிபு இன்னும் கண்டி மாவடத்திற்குள் பரவவில்லை. மிக சீக்கிரமாக இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படவில்லை என்றால், கண்டி மாவட்ட மக்களுக்கு டெல்டா திரிபினால், கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
இதனால், கண்டி மக்களுக்கு துரிதமாக இரண்டாவது தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.