தம்பலகாமத்தில் காட்டு யானைகளால் கடும் சிரமத்தை எதிர்நோக்கும் மக்கள்
திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள முள்ளிப்பொத்தானை ஈச்ச நகர் பகுதியில் தொடர்ந்தும் காட்டு யானைகளின் தொல்லையால் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று (11) அதிகாலை 2.00 மணியளவில் ஈச்சநகர் குளத்தை அண்டிய பகுதியில் ஊருக்குல் புகுந்த காட்டு யானை பயிர்களையும் உடைமைகளையும் சேதத்துக்குள்ளாக்கி விட்டு சென்றுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
மக்களின் கோரிக்கை
குறித்த பகுதியில் உள்ள ஈச்சநகர் குளத்தின் வழியாக காட்டு யானைகள் அதிகம் ஊருக்குல் படையெடுக்கின்றது எனவும் பாதுகாப்பான யானை வேலி இன்மையால் இரவில் நிம்மதியாக கூட தங்கள் பிள்ளைகளுடன் தூங்க முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதனால் தங்களின் காணிக்குள் உள்ள தென்னை, பலா, வாழை போன்ற சுமார் 15க்கும் மேற்பட்ட பயிரினங்களை துவம்சம் செய்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் மேலும் கூறுகின்றனர்.
எனவே, இக்காட்டு யானைகளின் தொல்லைகளில் இருந்து அச்சமின்றி வாழக்கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்தி தருமாறு உரிய அதிகாரிடம் அமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri
