விலைபோகும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்: முன்னாள் துணைவேந்தர் மோகனதாஸ்
நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டுமா? தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை பேசி விடலாம் என்ற எண்ணம் மாறவேண்டும் என யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் மோகனதாஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற புதிய ஆட்சி மாற்றத்திற்கான மக்களின் பங்களிப்பு என்ற தொனிப்பொருளிலான கருத்தரங்கிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இருக்கின்ற ஒற்றையாட்சி அரசியலமைப்பு மாற்றம் அடைய வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பாகும். ஆனால் இலங்கையில் இருக்கின்ற ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை மாற்றி விட்ட பின்னரும் தரகர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை பேசி எதை வேண்டுமானாலும் செய்து விடலாம் என்ற எண்ணம் தற்போது எழுந்துள்ளது.
மூன்றில் இரண்டு வேண்டுமா தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை பேசுவதற்குத் தரகர்கள் இருக்கிறார்கள் அதனை அவர்கள் விலைபேசி பெற்றுக் கொடுப்பார்கள். இவ்வாறான நிலையில் எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் விலைபேசி விடலாம் எண்ணம் மன வேதனையைத் தருகிறது.
எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் எப்படி வளர்ந்தார்கள் எப்படி அரசியலுக்கு வந்தார்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்கள் மக்கள் அவதானம் செலுத்த வேண்டும்.
எமது கலை, கலாச்சாரம் விழுமியங்கள் தொடர்பில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முறையாகப் போதிக்கப்படுவதற்குச் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏனெனில் நான் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்தபோது சமூக நீதி என்ற பாடத்திட்டத்தை நடத்தி குறித்த பாடத்திலே கட்டாயம் சித்தி அடைய வேண்டும் என்ற நடைமுறையை உருவாக்கினோம்.
ஆகவே விலை பேசி வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில் செய்யப்படுபவர்களுக்கு விலை
போக தயாராக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை இனி வரும் காலங்களில் மக்கள்
தெரிவு செய்யக் கூடாது'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
