அரசாங்கத்தின் செயற்பாட்டினால் மக்கள் கடும் பாதிப்பு! - ரஞ்சித் மத்துமபண்டார
கோவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அரசாங்கத்தின் திட்டமிடப்படாத செயற்பாட்டினால் நாட்டு மக்கள் கடுமையான சவால்களை எதிர்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார இதனை தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அத்தியாவசிய உணவு மற்றும் மருந்து பற்றாக்குறையால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தற்போது பல கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
அந்த பகுதிகளில் வாழ்பவர்கள் தற்போது அவர்களின் வருமான ஆதாரங்களை இழக்க நேரிட்டுள்ளது. எவ்வாறாயினும், உழைக்கும் மக்களுக்கு ஆரோக்கியமான போக்குவரத்து வசதிகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது.
இந்நிலையில், தற்போதைய நிலைமையை உணர்ந்து மக்கள் சார்பாக உடனடியாக எடுக்கப்பட வேண்டிய பல நடவடிக்கைகளை ரஞ்சித் மத்துமபண்டார பரிந்துரைத்துள்ளார்.
மேலும், சுகாதார வழிகாட்டுதல்களின்படி மக்களின் உயிரைக் காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம், என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam