‘‘நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பியமை குறித்து துக்கமடைந்துள்ள மக்கள்’’
நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பியமை குறித்து தற்போது மக்கள் துக்கமடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் ருவான் விஜேவர்தன (Ruwan Wijewardene) தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மக்கள் நன்றாக சாப்பிட்டு, உடைகளை உடுத்தி சிறப்பாக வாழ்ந்தனர் எனவும், சௌபாக்கிய நோக்கின் பிரதிபலனை மக்கள் தற்போது அனுபவிக்க நேரிட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த மூன்று மாதங்களாக சமையல் எரிவாயு மற்றும் பால் மா பிரச்சினையை அரசாங்கத்தினால் தீர்க்க முடியாமல் போயுள்ளது. அத்துடன் தற்போது சீமெந்து விநியோகமும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது.
சமையல் எரிவாயு பால் மா வரிசையில் நின்ற மக்களுக்கு தற்போது சீமெந்து வரிசைக்கு அரசாங்கம் தள்ளி வருகிறது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காததால் மக்கள் மிகவும் கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ளன.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சமையல் எரிவாயு, பால் மா மாத்திரமல்லாது இரசாயன பசளையையும் குறைந்த விலையில் வழங்கியது. எனினும் சௌபாக்கிய நாட்டை உருவாக்குவதற்காக மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பினர்.
சௌபாக்கியத்தை மக்கள் தற்போது அனுபவித்து வருகின்றனர் எனவும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தளம் வழியாக நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் சந்திப்பொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.