யாழில் முழுமையாக புனரமைக்கப்படாத வீதி! மக்கள் விசனம்(Photos)
வீதியை முழுமையாக புனரமைக்காமல்,புனரமைப்பு பணியை நிறுத்தியமையால் மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட காங்கேசன்துறை ஊரவில் வீதி, சுமார் 28 வருட காலப்பகுதிக்கு மேலாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த நிலையில் 2019ஆம் ஆண்டு கால பகுதியில், அப்பகுதி மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டனர்.
வீதி புனரமைப்பு
அதனையடுத்து 2020ஆம் ஆண்டு கால பகுதியில் இருந்து தமது வீதியை புனரமைத்து தருமாறு பிரதேச சபையிடம் மக்கள் கோரி வந்தனர்.
03 ஆண்டுகள் தொடர்ச்சியான கோரிக்கையின் பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன்போது சுமார் 300 மீற்றர் நீளமான வீதியில் 250 மீற்றர் தூரமான வீதி மாத்திரமே புனரமைக்கப்பட்டுள்ளது. மிகுதி சுமார் 50 மீற்றர் தூர வீதி புனரமைக்கப்படவில்லை.
வீதியை ஏன் முழுமையாக புனரமைக்கவில்லை என மக்கள் கோரிய போது , இந்த வீதிக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு , இவ்வளவு தூரமே புனரமைக்கலாம், மிகுதி வீதிக்கு நிதி போதாமையால் அவற்றை புனரமைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
மக்களின் கோரிக்கை
வீதியை புனரமைத்து தருமாறு , 03 ஆண்டுகளாக கோரி வந்த போதிலும் , தற்போதே வீதி புனரமைக்கப்பட்டது.
அவ்வாறு புனரமைத்த வீதியையும் பூரணமாக புனரமைக்காது குறையுடன் விட்டு சென்றுள்ளனர் என மக்கள் கூறியுள்ளனர்.
வீதியை புனரமைக்கும் போது , வீதியின் நீளம் அளந்து அதற்கு ஏற்றவாறு தானே நிதி ஒதுக்கி இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில் எவ்வாறு முழுமையான வீதிக்கு நிதி போதாது வந்தது ? என கேள்வி எழுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
நீண்ட காலத்தின் பின்னர் புனரமைக்கப்பட்ட வீதியை முழுமையாக புனரமைத்து தர நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறோம் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.









கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
