மூன்றாவது இரவிலும் கொட்டும் மழையில் தொடரும் மக்கள் போராட்டம் (Video)
காலிமுகத்திடலில் மூன்றாவது நாள் இரவுப்பொழுதிலும் கொட்டும் மழையில் "கோட்டா வீட்டுக்குப் போ" என்ற கோஷத்துடன் மக்களின் மாபெரும் போராட்டம் தொடர்கின்றது.
ஏராளமான மக்களின் பங்குபற்றுதலுடன் மழைக்கு மத்தியிலும் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
கோட்டாபய வீட்டுக்குப் போகும் வரை நாங்கள் வீட்டுக்குப் போகமாட்டோம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ள நிலையில் இவ்வாறு போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
தொடர்ச்சியாக இரண்டு நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் உணவு, குடிதண்ணீர் மற்றும் குடி பானங்களை வழங்கி வருகின்றனர்.
அரசின் ஒவ்வொரு நகர்வையும் அவதானித்தபடியும் ஏற்படப்போகும் மாற்றங்களை எதிர்பார்த்தபடியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.