ராஜபக்சர்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டிய விடயத்தை வலியுறுத்தும் கே.டி.லால்காந்த (Video)
மக்கள் போராட்டம் இன்னும் ஓயவில்லை என்பதை ராஜபக்சர்கள் உள்ளிட்ட
ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ஜே.வி.பியின் அரசியல் குழு
உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.டி.லால்காந்த
தெரிவித்துள்ளார்.
கொத்மலை - பூண்டுலோயா பகுதியில் நேற்று (27.11.2022) நடைபெற்ற கொத்மலை தேர்தல் தொகுதியின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நாட்டை விட்டோடிய பசில் ராஜபக்ச அண்மையில் நாடு திரும்பினார். பலமான அரசியல் இயக்கத்தை அவர் உருவாக்க போவதாக சிலர் கூறித்திரிகின்றனர். விமான நிலையம் வந்த பசிலுக்கு அவரின் சகாக்கள் மற்றும் அடியாட்களால் அரச அனுசரணையுடன் வரவேற்பளிக்கப்பட்டது.
பொருளாதாரத்தை நாசமாக்கியவர்கள்
ஆனால் தான் நாட்டைவிட்டு செல்ல முற்படுகையில் விமான நிலைய ஊழியர்கள் தன்னை எப்படி கவனித்தார்கள் என்பதை பசில் ராஜபக்ச மறந்துவிடக்கூடாது.
மக்கள் போராட்டம் இன்னமும் ஓயவில்லை. கோரிக்கைகள் அவ்வாறே உள்ளன.
கொள்ளையர்கள், பொருளாதாரத்தை நாசமாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், கொள்ளையடிக்கப்பட்ட வளங்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என மக்கள் தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றனர்.
இதையும் பசில் உள்ளிட்டவர்கள்
புரிந்துகொள்ள வேண்டும்.
அதேவேளை, ஹிட்லர் பற்றி கதைப்பதற்கு முன்னர் 'காற்சட்டை'யை எப்படி சரியாக
அணிவது என்பதை ரணில் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
