டோக்கியோவில் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி! சர்வதேசத்தின் சதி திட்டம்(Video)
போர் நடந்த காலக்கட்டத்தில் விடுதலைப்புலிகள் முழுமையான தீர்வை கோரினார்கள் அந்த காலத்தில் தமிழர்களுக்கு ஒரு பலம் இருந்தது என மூத்த பத்திரிக்கையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,விடுதலைப்புலிகளின் பலம் காரணமாக தீர்வை நோக்கி கலந்துரையாட வந்தார்கள். ஆனால் அதை கூட என்ன செய்தார்கள்? சுற்றி வளைத்தார்கள்.
இதன் காரணமாக தான் பேச்சு வார்த்தையில் தொய்வு ஏற்பட்டது.
விடுதலைப்புலிகள் சம அந்தஸ்து கேட்டார்கள். இதன் பிறகே பேர்ச்சுவார்தைக்கு தயாரானார்கள் ஆனால் சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து இலங்கை விடுதலைப்புலிகளை இரண்டாம்பட்சமாக்கியது.
சர்வதேசம் மற்றும் அமெரிக்கா, இந்திய போன்ற நாடுகளை கொண்டு ஜனநாயகத்தை பேண வேண்டும், பயங்கரவாதத்தை கைவிட வேண்டும், தற்கொலை தாக்குதலை கைவிட வேண்டும் என பல அழுத்தங்களை கொடுத்து விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்தினார்கள்.
மேலும் டோக்கியோவில் நடந்த நிதி வளங்கள் மாநாட்டில் கூட விடுதலைப்புலிகளை இரண்டாம்பட்சமாக்கினார்கள்.இங்கு தான் பிரச்சினைகள் ஆரம்பமானது.
2009 வரையில் எம்மிடம் ஆயுத ரீதியான பலம், அரசியல் ரீதியான பலம் என அனைத்தும் இருந்தது.2009 இற்கு பின்னர் தமிழ் தரப்பு மத்தியில் பலமான அரசியல் பலம் இல்லை.
ஆனால் அரசியல் ரீதியான பலமான ஜனநாயகத்தை கட்டியெழுப்ப கூடிய உணர்வு மக்கள் மத்தியில் உள்ளது.



