வீதியை புனரமைத்து தருமாறு கோரி மக்கள் போராட்டம் (Video)
பொகவந்தலாவ - சிங்காரவத்தை தோட்டத்திற்கு செல்லும் பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
சிங்காரவத்தை தோட்டத்தின் கிராம அபிவிருத்தி உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நேற்று (19) இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மக்கள் தெரிவிக்கையில், “நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட சிங்காரவத்தை தோட்டத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களை சார்ந்த 1800க்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
மக்களின் கோரிக்கைகள்
இதற்கமைய பொகவந்தலாவ நகரத்திலிருந்து இத்தோட்டத்திற்கு செல்லும் ஒன்பது கிலோமீட்டர் கொண்ட பிரதான வீதி குன்றும், குழியுமாக போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் காணப்படுகிறது.
இப்பாதையை நோயாளர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியோர்கள் என அன்றாடம் தொழிலுக்கு செல்பவர்களும் பயன்படுத்துகின்றனர்.
இதேவேளை ரொக்கில், சிங்காரத்தை, வானக்காடு, மோரார் மேற்கு பிரிவு ஆகிய தோட்டங்களை சேர்ந்த மக்களும் இப்பாதையை பயன்படுத்துகின்றனர்.
வாகன வசதிகள் இல்லாத காரணத்தினால் பாடசாலை மாணவர்களும் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சுமார் 25 வருடங்களுக்கு மேல் பாதை சீர் செய்யாத காரணத்தினால் மண் பாதையாகவே காணப்படுகிறது.
உடனடியாக பாதையை செப்பனிட்டு தருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
முன்வர வேண்டும். சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மாத்திரம் இத்தோட்டத்துக்கு வருகின்றார்கள்.
தற்போது எங்களுடைய பிரச்சினையை எவரும் கண்டு கொள்வதில்லை. மாணவர்களின் கல்வி விடயத்தில் அக்கறை காட்டி இப்பாதையினை உடனடியாக செய்து தர முன்வர வேண்டும்" என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.











கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
