உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள காணிகளை விடுவிக்க கோரி மக்கள் போராட்டம்
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்று(10.07.2026) 12ஆவது வாரமாகவும் அமைதி வழியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
17 வருடங்கள் கடந்த நிலையில்
வலி. வடக்கு பலாலி மயிலிட்டியைச் சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.
இந்நிலையில் தமது 650 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வருவதோடு, காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்தனர்.
குறிப்பாக இன்றையதினம் வெள்ளிக்கிழமையும் போராட்டத்தை முன்னடுத்தனர். இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் எஸ். ஸ்ரீகாந்தா, பொதுமக்கள், காணி உரிமையாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.