நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் காங்கிரஸின் தீர்மானம்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ், திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் இணைந்தே போட்டியிடும் என மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
கிண்ணியா விசன் மண்டபத்தில் இடம்பெற்ற மாவட்ட மத்திய குழுக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, அம்பாறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் தனித்து போட்டியிட வேண்டும் என உயர் பீட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய குழு
இது தொடர்பாக அம்பாறை மாவட்ட மத்திய குழுவை கூட்டி தீர்மானங்களை மேற்கொள்வோம் என ரிஷாட் கூறியுள்ளார்.
குறித்த மத்திய குழு கூட்டத்தில் மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் அப்துல்லா மஹ்ரூப், உயர் பீட உறுப்பினர் ஹில்மி முகைதீன் பாவா மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
