மக்களின் நடத்தை அடுத்து வரும் மாதங்களில் மிக முக்கியமானது! இராணுவத் தளபதி தெரிவிப்பு
ஒக்டோபர் மாதத்தில் பதிவாகும் கொரோனா நிலவரங்கள் அடுத்துவரும் மாதங்களில் நாட்டின் நிலைமையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறக்கப்பட்டால் அடுத்து வரும் காலப்பகுதியில் பொதுமக்களின் நடத்தை மிகவும் முக்கியமானது. நாட்டை மீண்டும் திறந்ததன் பின்னர் சேவைகளைச் செயற்படுத்துவதற்கான விரிவான திட்டங்களை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டில் கோவிட் நோய்த் தொற்று மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சியை அவதானிக்க முடிகின்றது.
நாட்டில் புதிய கோவிட் கொத்தணிகள் உருவாகுவதைத் தடுக்கும் வகையில் பெரிய கூட்டங்களைத் தடுப்பதற்காக நாட்டைப் பல கட்டங்களாக மீண்டும் திறக்க எதிர்பார்த்துள்ளோம்" - என்றார்.
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
தற்கொலை செய்துகொள்ளப்போகும் மயில், அதிர்ச்சியில் மீனா.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ Cineulagam
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திருமணம் முடிந்தது... மாப்பிள்ளை யார் தெரியுமா? ஜோடியின் புகைப்படம் இதோ Cineulagam