மேலதிக பணத்தை பெற்ற அரச வங்கியொன்றின் வாடிக்கையாளர்கள் - பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு

Sri Lanka People's Bank Money
By Mayuri May 17, 2026 02:41 AM GMT
Report

நாணய மாற்று வீதத்தில் ஏற்பட்ட தவறு தொடர்பில் மக்கள் வங்கி விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி குறிப்பிட்டதொரு பணப்பரிமாற்றக் கட்டமைப்பில் நாணயமொன்றிற்குப் பிரயோகிக்கப்பட்ட நாணய மாற்று வீதத்தில் ஏற்பட்ட தவறு மற்றும் அதன் மூலம் வாடிக்கையாளர்கள் சிலர் மேலதிகப் பணத்தைப் பெற்றுக்கொண்டமை தொடர்பாக மக்கள் வங்கி அதிகாரப்பூர்வ விளக்க அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இந்தத் தவறுதலான பணப்பரிமாற்றங்கள் கடந்த 2023 மே மாதம் முதல் 2026 மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையை சூழ்ந்துள்ள பாரிய ஆபத்து! எகிறும் வெளிநாட்டு நாணயம் - கேள்விக்குறியாகும் மக்களின் வாழ்க்கை

இலங்கையை சூழ்ந்துள்ள பாரிய ஆபத்து! எகிறும் வெளிநாட்டு நாணயம் - கேள்விக்குறியாகும் மக்களின் வாழ்க்கை

பொதுமக்களுக்கான அறிவிப்பு

இதன் காரணமாக குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் குறித்த தொகைக்கு மேற்பட்ட பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளமை அண்மையில் கண்டறியப்பட்டு, அதன் பின்னர் அது முழுமையாகச் சரிசெய்யப்பட்டு விட்டதாக மக்கள் வங்கி பொதுமக்களுக்கு அறியத்தந்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில் மேலும், இந்தத் தவறு கண்டறியப்பட்ட உடனேயே வங்கி முழுமையான உள்ளக மீளாய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன், உரிய செயற்பாட்டுக் கட்டுப்பாடுகளை வலுப்படுத்தியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி உட்பட உரிய ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை அதிகாரத் தரப்புக்களின் ஆலோசனையின் கீழ் இவ்விடயத்தை வங்கி தற்போது மீளாய்வு செய்து வருகின்றது.

கண்கள் - கைகள் கட்டப்பட்டு மட்டக்களப்பு கொண்டுவரப்பட்ட ஊடகவியலாளர்! ஆதாரங்களுடனான உண்மைகள்..

கண்கள் - கைகள் கட்டப்பட்டு மட்டக்களப்பு கொண்டுவரப்பட்ட ஊடகவியலாளர்! ஆதாரங்களுடனான உண்மைகள்..

நிதிரீதியான இழப்பு

இவ்விடயத்தால் ஏற்பட்டுள்ள நிதிரீதியான இழப்பு சுமார் ரூபா 656 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தொகையை வங்கி ஏற்கனவே குறிப்பிட்ட காலப்பகுதிக்கான தனது நிதி அறிக்கைகளில் முழுமையாக உள்வாங்கியுள்ளது.

தற்போதைய மதிப்பீடுகளின் அடிப்படையில், மேலதிக நிதி இழப்பீடு எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் அந்த இழப்பினை மீட்கும் நடைமுறைகளை வங்கி ஏற்கனவே ஆரம்பித்துள்ளதுடன், குறித்த வாடிக்கையாளர்களிடமிருந்து அதனை மீளப்பெறும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

வங்கியின் அன்றாடச் செயற்பாடுகள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் எவ்விதமான தங்குதடையுமின்றி வழக்கம் போல் இடம்பெற்று வருகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஷானி அபேசேகரவால் தூக்கத்தை தொலைத்த முக்கிய புள்ளிகள்! ஜூன் 1ஆம் திகதி நடக்கப்போகும் சம்பவம்

ஷானி அபேசேகரவால் தூக்கத்தை தொலைத்த முக்கிய புள்ளிகள்! ஜூன் 1ஆம் திகதி நடக்கப்போகும் சம்பவம்

Gallery
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US