கடன் தள்ளுபடி செய்யப்படுகிறதா..! மக்கள் வங்கி நிர்வாகத்திடமிருந்து முக்கிய அறிவிப்பு
மக்கள் வங்கியின் செயல்படாத கடன் தள்ளுபடிகள் தொடர்பான தவறான தகவல்கள் மீண்டும் சில சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக மக்கள் வங்கி அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் மக்கள் வங்கியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிடப்பட்ட ஒரு தீங்கிழைக்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த செய்தி இருக்கலாம் என்பதை இந்த தவறான குற்றச்சாட்டின் காலகட்ட மீள் எழுச்சி வலுவாகக் காட்டுகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மக்கள் வங்கியின் நிர்வாகம்
மேலும், இந்த முயற்சிகளால் பொது மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதைத் தடுப்பதற்காக, அந்த தவறான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள கடன்கள் எதுவும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பதை வங்கி நிர்வாகம் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

98வது ஆஸ்கர்.. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' படம்.. Cineulagam
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam