கல்முனையில் திறக்கப்பட்டுள்ள புதிய மதுபானசாலைக்கு மக்கள் எதிர்ப்பு
கல்முனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பெரியநீலாவணையில் ஏற்கனவே ஒரு மதுபானசாலை உள்ள நிலையில் மீண்டும் புதிதாக ஒன்று திறக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இணைந்து அகிம்சை வழி பேராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது, நேற்றைய தினம் (09) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பாடசாலை மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக குறித்த மதுபானசாலை இருப்பதாகவும் போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளதுடன், பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோர் இது தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.
தற்காலிகமாக பூட்டு
ஏற்கனவே, ஒரு மதுபானசாலை நீண்ட நாட்களாக உள்ள நிலையில் புதிதாக ஒரு மதுபானசாலை இங்கு அவசியம் இல்லை எனவும், சிறிய கிராமமான இக் கிராமத்திற்கு இரு மதுபானசாலைகள் தேவையில்லை. இது எங்கள் சமூகத்தை சீரழிக்கவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு கல்முனை வடக்கு
பிரதேச செயலாளர் ரி. ஜே.அதிசயராஜ் வருகை தந்த நிலையில் மதுபானசாலை உரிமையாளரிடம் தற்காலிகமாக மூடுமாறும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறும் குறித்த மதுபானசாலையை அகற்றுவதற்கான நடவடிக்கையை மதுவரி திணைக்களத்துடன் கலந்துரையாடி மேற்கொள்வதாகவும் அவர் உறுதி அளித்துள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் கலைந்து சென்றுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




















மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan