மக்கள் எதிர்ப்பு வைபவத்திற்கு செல்லாது தவிர்த்த ஷசீந்திர ராஜபக்ச
ராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச தலைமையில் கிரிஹிப்பன்ஹார மகாவலி விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெறவிருந்த காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வுக்கு மக்கள் எதிர்ப்பை வெளியிட்டதன் காரணமாக, ஷசீந்திர ராஜபக்ச அதில் கலந்துக்கொள்ளவில்லை.
பொருளாதார நெருக்கடிகள் காரணமாக ராஜாங்க அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பிரதேசத்தில் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டிருந்தனர். ராஜாங்க அமைச்சர் நிகழ்வுக்கு வருவார் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அங்கு செல்லவில்லை என தெரியவருகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள வாழ்க்கை செலவு அதிகரிப்பு, அத்தியவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் என்பன காரணமாக மக்கள் அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர்.
இதன் காரணமாக பல இடங்களில் ஏற்கனவே திட்டமிடப்படாத வகையில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடந்து வருகின்றன.





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri

பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
