கந்தளாய் பகுதியில் வீதி புனரமைப்பில் ஏற்பட்ட சிக்கல் - எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்
கந்தளாய் - பேராறு, அம்மன் கோவில் வீதியை புனரமைப்பதில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை காரணமாக அப்பகுதி மக்கள் பாரிய கண்டன போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டமானது நேற்று(08.05.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வாக்குறுதி நிறைவேற்றப்படாமை
பல தசாப்தங்களாக புனரமைக்கப்படாமல் இருந்த இந்த வீதியை, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் ‘காபட்’ (Carpet) வீதியாக மாற்றித் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தது.
இந்த வாக்குறுதியை நம்பியே மக்கள் இந்த முறை அரசாங்கத்திற்கு ஆதரவளித்ததாகத் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும், தற்போது குறித்த வீதியை காபட் செய்வதற்குப் பதிலாக ‘கொங்கிரீட்’ (Concrete) வீதியாக அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனால் அதிருப்தியடைந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், “எங்களுக்கு கொங்கிரீட் வீதி வேண்டாம், வாக்குறுதி அளித்தபடி காபட் வீதியே வேண்டும்” என வலியுறுத்தி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, களத்திற்கு வரவிருந்த ஆளுநர், மக்களின் எதிர்ப்பைக் கண்டு அந்த இடத்திற்கு வராமலேயே திரும்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

எனினும், கந்தளாய் பிரதேச சபை அதிகாரிகள், மேல் இடத்திலிருந்து அவசர அழைப்பு வந்த காரணத்தினால் ஆளுநர் அவசரமாக திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருந்த போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, மக்களின் கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டத்தைத் தொடர்ந்து, இன்று(09) ஆரம்பிக்கப்படவிருந்த வீதி புனரமைப்புப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், தமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என அப்பகுதி மக்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.
ட்ரம்ப் பாப்பரசர் மீது வைத்துள்ள விமர்சனம்: ஈரானுடனான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்த இத்தாலிய பிரதமர்