நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்- செய்திகளின் தொகுப்பு
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போர் ஆறாவது மாதத்தை எட்டியுள்ள போது காசாவில் குழந்தைகள், பெண்கள் உட்பட 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விரைவில் தேர்தலை நடத்தி பிரதமர் பதவி விலக வேண்டும் என இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
டெல் அவிவ் நகரில் 10,000க்கும் மேற்பட்டோர் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவர்கள், பிரதமர் நெதன்யாகு(Benjamin Netanyahu) பதவி விலகக் கோரி முழக்கங்களை எழுப்பியுள்ளனர். பொதுத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |