வடமராட்சி கிழக்கில் தனியார் நிறுவனம் ஒன்றின் கோரிக்கைக்கு மக்கள் மறுப்பு
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதிகளில் தனியார் ஒருவருக்கு கோல்ப் விளையாட்டுக்களுடன் கூடிய சுற்றுலா, பொழுதுபோக்கு மையங்கள் அமைப்பதற்காக 300 ஏக்கர் காணியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நேற்றைய தினம், மணல்காடு, குடத்தனை வடக்கு, பொற்பதி கிராம மக்களுடன் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மக்களின் விருப்பமின்மை
இதன்போது, குறித்த தனியார் நிறுவனத்தால் மக்களிடம் காணியை பெற்றுக்கொள்வதற்காக விருப்பம் கோரியபோது பிரதேச மக்களால் தமது கிராம சூழலில் காணிகளை வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதேச மக்கள், தமது மணல்காடு கிராமத்தில் தற்போது 450க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும் இதில் 150 பேருக்கு மேற்பட்ட குடும்பங்கள் கணி இல்லாமல் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் வசித்து வருவதாகவும் குறிப்பிட்டனர்.
தமது கிராமத்தை சூழவுள்ள பகுதியில் 156 ஏக்கர் காணி மட்டுமே உள்ளது என்றும் இதனால் தமது கிராமத்தில் கணி இல்லாதோர்க்கே காணிகள் வழங்க இருக்கின்ற அரச காணிகள் போதாத நிலை உள்ளதாகவும், இதனாலேயே தமது எதிர்கால சந்ததிகளின் நலன்கருதி குறித்த பகுதியில் காணிகள் வழங்க முடியாத நிலை உள்ளது என தெரிவித்துள்ளனர்.
அதேவேளை குறித்த விடயம் தொடர்பில் அந்த தனியார் நிறுவனத்திடம் கேட்டபோது மக்கள் ஏதிர்க்கின்றனர். இதனால் மக்களின் எதிர்ப்பை மீறி தமது கோல்ப் மைதானத்துடன் கூடிய பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா மையங்களை அமைக்கும் பணியை தொடர போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
டாடி மம்மி பாடல் புகழ் முமைத் கானை நினைவிருக்கா.. கோமாவில் இருந்தவர் 7 வருடமாக படும் துயரம் Cineulagam