வவுனியாவில் அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு மக்கள் அஞ்சலி
அன்னை பூபதியின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி வவுனியாவை வந்தடைந்த நிலையில், அவருடைய திருவுருவப்படத்துக்கு மக்கள் அஞ்சலி வெலுத்தியுள்ளனர்.
நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று (16.04) வவுனியாவை வந்தடைந்துள்ளது.
மேலும், தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த அன்னை பூபதியின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி வடக்கு - கிழக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ளது.
மலர்மாலை அணிவிப்பு
குறித்த ஊர்தி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக நிறுத்தப்பட்டதனையடுத்து அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத் தலைவி கா.ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன், தாய்மாரால் மலர்மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |