அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மக்கள் அரச பேருந்தை நாளாந்தம் தள்ளித்திரிந்து இயக்கும் சம்பவம் ஒன்று பேசு பொருளாகி உள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நாளாந்தம் காலை 06.00 கட்டைக்காட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் அரச பேருந்தை பழுது காரணமாக சில நாட்களாக மாணவர்கள், மக்கள் சேர்ந்து தள்ளி இயக்கும் சம்பவம் இடம்பெறுகின்றது.
மக்கள் தள்ளி பேருந்து இயங்காது போனால் சம நேரத்தில் பருத்தித்துறைக்கு பயணிக்கும் அரச பேருந்தால் குறித்த பேருந்து கட்டி இழுக்கப்பட்டு இயக்குவது வழக்கம்.
மக்கள் கோரிக்கை
இன்று(4) காலை 06.00 மணிக்கு வழமை போன்று பாடசாலை மாணவர்களோடு பொதுமக்கள் குறித்த பேருந்தை தள்ளி இயக்க முயன்றபோது பேருந்து இயங்கவில்லை.
பின்பு பருத்தித்துறை நோக்கி பயணிக்கவிருந்த அரச பேருந்து மூலம் கட்டி இழுத்து இயக்க முயன்ற வேளையும் பேருந்து இயங்கவில்லை.இதனால் இன்று காலை 06.00 மணிக்கு கட்டைக்காட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் அரச பேருந்து பயணிக்காததால் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பலர் பாதிப்படைந்தனர்.

வடமராட்சி கிழக்கு மக்களின் தொடர் கோரிக்கையான, வடமராட்சி கிழக்கு பகுதிக்கு சிறந்த தரமான பேருந்து சேவை ஒன்றை வழங்குமாறு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் போன்ற பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டது.ஆனாலும் மக்களின் கோரிக்கை இன்று வரை தீர்க்கப்படவில்லை.
இந்த அவல நிலையை கருத்தில் கொண்டு சிரமம் இன்றி சேவையில் ஈடுபடக் கூடிய நல்ல தரமான ஒரு அரச பேருந்தை சேவையில் ஈடுபட செய்யுமாறு வடமராட்ச்சி கிழக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சைபர் குற்றங்கள் மற்றும் சட்டவிரோத இணையவழி சூதாட்ட நடவடிக்கைகள்! பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பில் விசேட கவனம்
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening