அனோஜனின் விடுதலைக்காக காத்திருக்கும் இலங்கை மக்கள் - புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் கோரிக்கை
சவூதி அரேபியாவில் கைதியாக சிறைபிடிக்கப்பட்ட இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞரான சிவராஜா அனோஜனை மனிதநேய அடிப்படையில் மரண தண்டனையிலிருந்து அவருக்கு மன்னிப்பு அளிக்கப் பட வேண்டும் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொது செயலாளர் சி.கா.செந்திவேல் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மதத்தை அவதூறாக பேசினார் என்பதற்காக ஒரு மனிதனின் அதுவும் மற்றொரு நாட்டைச் சேர்ந்த ஒருவரின் உயிரைப் பறிப்பது என்பது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.
அனோஜனின் விடுதலை
எனவே எமது நாட்டைச் சேர்ந்த சிவராஜா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையிலிருந்து மனிதநேய அடிப்படையில் அவருக்கு மன்னிப்பும் விடுதலையும் வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாக இருக்கின்றது. தங்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காகவே அனோஜன் சவூதிக்கு வேலைக்கு சென்றார்.

அங்கிருந்து அவர் பதிவிட்ட இஸ்லாம் மத நிந்தனையை இழிவுபடுத்தல் அல்லது அவதூறு எதுவானாலும் அவை எக்காரணத்தாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவைகள் அல்ல.
அதே போன்று இந்து மத நிந்தனையோ இழிவு படுத்தல்களோ அல்லது வேற்று மத வெறுப்புக்களோ ஏற்றுக் கொள்ளத் தக்கனவல்ல என்றார்.
இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு ஆயுத விற்பனை - இறுதிப் போரில் எஞ்சிய வெடிப்பொருட்களுக்கு என்ன நடந்தது...!
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri