வடக்கு மக்கள் ரணிலுக்கு தக்க பாடம்புகட்டுவர்: சஜித் அணி சூளுரை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வட மாகாண மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு வடக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வியாழக்கிழமை முதல் நேற்று வரை வடக்கு மாகாணத்துக்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இந்த விஜயம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே திஸ்ஸ அத்தநாயக்க குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் வடக்கு விஜயம்
அவர் மேலும் தெரிவிக்கையில், வாக்கு அரசியலுக்காகவே ஜனாதிபதி வட மாகாணத்துக்கு விஜயம் செய்துள்ளார். அவரின் வருகையை வடக்கு மக்கள் விரும்பவில்லை.
அவர்கள் வீதிகளில் நின்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகப் போராடுகின்றார்கள். ரணிலை வடக்கு மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு வடக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
வடக்கு மக்கள் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியையே ஆதரிப்பார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு அதிகப்படியான வாக்குகளை வடக்கு மக்கள் அளித்தார்கள்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் அதைவிடப் பெருமளவிலான வாக்குகளை சஜித் பிரேமதாசவுக்கு வடக்கு மக்கள் வழங்குவார்கள். இம்முறை சஜித் பிரேமதாசவின் வெற்றியில் வடக்கு மக்களின் பங்கு முக்கிய இடம் வகிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
