விலைவாசி உயர்வால் திருகோணமலை மக்கள் கடும் பாதிப்பு!
அண்மைக் காலமாக நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசியின் காரணமாக அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனத் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்டச் செயலாளர் சின்னமோகன் தெரிவித்தார்.
இன்றையதினம்(21.5.2026) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் விலை, பால்மா விலை உயர்வு எரிவாயு, மின் கட்டணம் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வடைந்துள்ளன.
கோரிக்கை
இதனால் திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல், சீனன்வெளி, நல்லூர் மற்றும் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாட்டாளிபுரம், சூடைக்குடா, கூனித்தீவு, கடற்கரைச்சேனை, கங்குவேலி, குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் திரியாய், தென்னைமரவாடி, புல்மோட்டை, இறக்கக்கண்டி, மற்றும் கிண்ணியாவில் கரையோரப்பகுதி பொது மக்கள் உட்பட பல பிரதேச கிராமப்புறங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு விவசாயத்துறையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.எனவே இந்த விலை உயர்வு நெருக்கடிகளைத் தொடர விடாமல் அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சின்னமோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri