தேங்காய் உடைத்து எரிபொருள் பவுசரை வித்தியாசமான முறையில் வரவேற்ற யாழ்.மக்கள் (Video)
யாழ்ப்பாணம்-நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலைத்திற்கு எரிபொருள் பவுசர் வந்த மகிழ்ச்சியில் மக்கள் தேங்காய் உடைத்து கொண்டாடியுள்ளனர்.
எரிபொருள் பெற்றுக்கொள்ள இன்றும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்த நிலையில் எரிபொருள் பவுசர் பல மணிநேரம் வரவில்லை.
மக்கள் காத்திருப்பு

நெல்லியடி பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று(21) எரிபொருளுக்காக நூற்றுக்கணக்கான வாகனங்களுடன் மக்கள் காத்திருந்துள்ளனர்.
இதேவேளை கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட எரிபொருள் அட்டை பெற்றுக்கொண்டவர்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முச்சக்கர வண்டிகளுக்கு 3000 ரூபாவிற்கும், மோட்டார் சைக்கிள்களுக்கு 2000 ரூபாவிற்கும் பெட்ரோல் வழங்கப்படும் என ஒலிபெருக்கி மூலம் கரவெட்டி பிரதேச செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் நடவடிக்கை

இந்நிலையில் கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான வாகனங்களுடன் மக்கள் காத்திருந்துள்ளனர்.
நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பெட்ரோல் வழங்குவதற்கான ஒழுங்குபடுத்தும் பணிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam