எரிபொருள் வழங்க கோரி மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்(Photo)
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பிரதேசத்தில் எரிபொருள் வழங்க கோரி மக்கள் இன்று (21) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
கந்தளாய் 91 ஆம் கட்டைப்பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த வேளையில் எரிபொருள் இல்லை என்று திடீரென கூறியதையடுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
போராட்டம்
இதனால் வீதியால் சென்ற எரிபொருள் தாங்கி வண்டியை மறித்து நகர விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.


முறுகல் நிலை
பின்பு எரிபொருள் உரிமையாளருக்கும் பொது மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸாரும் இராணுவத்தினரும் முரண்பாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததையடுத்து மக்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.
| எரிபொருள் விநியோகம் குறித்து எரிசக்தி அமைச்சின் விசேட அறிவிப்பு |
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
விளம்பரத்தில் நடிக்க நடிகர் அஜித்குமார் வாங்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?... அடேங்கப்பா Cineulagam
ட்ரோன்கள் அத்துமீறும்... நிம்மதியாக உங்களைத் தூங்க விடாது: ஐரோப்பாவிற்கு ரஷ்யா மிரட்டல் News Lankasri