யாழில் பெருமளவு நிலப்பரப்பு விடுவிக்க நடவடிக்கை
யாழ்.நெடுந்தீவில் சரணாலயத்துக்குச் சொந்தமானதாக அறிவிக்கப்பட்ட பகுதியிலிருந்து சுமார் 1191.11 ஹெக்டேயர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கு யாழ்.மாவட்ட செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வன ஜீவராசிகள், வன பாதுகாப்பு அமைச்சு கடந்த 2015 ஜூன் 22 ஆம் திகதியன்று நெடுந்தீவில் 1728.11 ஹெக்டேயர் நிலப்பகுதியை வன,விலங்கு பாதுகாப்பு சரணாலயத்துக்கானதாக வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் குறித்த நிலப்பரப்பிலிருந்து மக்கள் வாழ்விடம், அபிவிருத்தி, பயிர் செய்கை போன்றவற்றுக்குப் பெருமளவான பகுதியை விடுவிக்குமாறு 2021 பெப்ரவரி 14 ஆம் திகதி வன ஜீவராசிகள், வன பாதுகாப்பு அமைச்சின் வட மாகாண பணிப்பாளர் மா.பரமேஸ்வரன் மற்றும் வன ஜீவராசிகள், வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரட்னாயக்காவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதையடுத்து அமைச்சரின் உத்தரவுக்கு அமைய வன,விலங்கு பாதுகாப்பு சரணாலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் 537 ஹெக்டேயர் தவிர 1191.11 ஹெக்டேயரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக 2021 மார்ச் 8 ஆம் திகதி தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் 1191.11 ஹெக்டேயரை விடுவிக்க யாழ் மாவட்ட செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri
இந்த புகைப்படத்தில் எம்.ஜி.ஆர் தூக்கி வைத்திருக்கும் சிறுவன் யார் தெரியுமா? தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ Cineulagam