மக்கள் பொலிஸாரை தாக்க நேரிடும் - முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுடன் பாரிய குற்ற அலைகள் உருவாகியுள்ளதாக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இலங்கையில் இத்தகைய நெருக்கடியை கையாள போதுமான பொலிஸ் அதிகாரிகள் இருந்தாலும், உயரடுக்கு பாதுகாப்பு கடமைகளுக்காக பலர் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளனர்.
தோற்கடிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
பொலிஸ்துறை அதிகாரிகள் சாதாரண மக்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது தற்காப்புக்காக பொலிஸ்துறையினரை தாக்கும் வாய்ப்புகள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
