பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பிரவுன்ஸ்விக் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்
மஸ்கெலியா - பிரவுன்ஸ்விக் தோட்ட மக்கள் பல்வேறு விடயங்களுக்குத் தீர்வைக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
நியாயமான 1000 ரூபா சம்பள உயர்வு வேண்டும், வேலை நாட்களைக் குறைக்கக் கூடாது, மற்றும் கூட்டு ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறும் ஆர்ப்பாட்டகாரர்கள் கோரியுள்ளனர்.
பிரவுன்ஸ்விக் தோட்ட ஆலய முன்றிலில் இன்று காலை 8.30 அளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஏற்படடகறார்கள் கருத்து தெரிவிக்கையில்,
1000 ரூபா சம்பள அதிகரிப்பைத் தருவதாகக் கூறிய கம்பனிகள் தற்போது ஏமாற்றியுள்ளன.
முன்னர் நாளொன்றுக்கு 16 கிலோ கிராம் பச்சைத் தேயிலையைப் பறித்து வந்த நிலையில், இன்று அது 20 கிலோ கிராம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிர்வாகங்களின் கெடுபிடிகளால் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறோம்.
நிர்வாகத்தால் தோட்டம் உரிய முறையில் பராமரிக்கப்படாமையால் தேயிலை செடிகள் காடுகளாய் மாறியுள்ளன. இவ்வாறான நிலையில் தேயிலை செடிகளுக்கும் பெரும் அச்சத்துடனேயே பணி செய்ய வேண்டியுள்ளது.
தோட்ட நிர்வாகம் எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்துக்கொடுக்காமல் அடிமைகளைப் போல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி ஆகியவற்றை நிர்வாகம் முறையாகச் செலுத்துவதில்லை.
எனவே தமது பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தலையிட்டு நியாயமான தீர்வை பெற்றுத்தர வேண்டும் என ஆர்ப்பாட்டகாரர்கள் கோரியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க பேதமின்றி 150க்கும் அதிகமான தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.





டாடி மம்மி பாடல் புகழ் முமைத் கானை நினைவிருக்கா.. கோமாவில் இருந்தவர் 7 வருடமாக படும் துயரம் Cineulagam
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன? News Lankasri