இரணைதீவில் அடிப்படை வசதிகள் இன்றி வாழும் மக்கள்!
கிளிநொச்சி இரணைதீவில் மீள் குடியேறி வாழ்ந்து வரும் மீனவக் குடும்பங்கள் அடிப்படை வசதிகள் இன்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர் .
கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைதீவு பகுதியில் மீள் குடியேறியுள்ள மீனவ குடும்பங்கள் தாங்கள் பெருமளவான முதலீடுகளை செய்து தமது தொழில்களை கடந்த 22 வருடங்களுக்கு பின்னர் ஆரம்பித்துள்ளதாகவும், இப்பகுதியில் மீள்குடியேறிய மீனவ குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக குடிநீர் வசதி மற்றும் மருத்துவ வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலை காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த ஆண்டு இப்பகுதியில் பல இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சூரிய மின் விளக்குகள் கூட பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன என்றும் அவை திருத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரியுள்ளனர்

தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan