பத்து நிமிடத்தில் ஐம்பதினாயிரம் டொலர்கள் வழங்க வரிசை கட்டி நின்ற மக்கள்! செந்தில் குமரனின் இசை நிகழ்ச்சிகள் மனதை உருக்கிய மனித நேயம்

IBC Tamil Lankasri
By Shadhu Shanker Nov 13, 2026 02:34 PM GMT
Report

கடந்த 6 ஆம் திகதி வெள்ளி மாலை, Scarborough Metropolitan Center அரங்கில் மனிதநேயம் கொண்ட மக்கள் ஆதரவுடன் லங்காசிறி, தமிழ்வின், IBC தமிழ் பிரதான ஊடக அனுசரணையுடன் இனிதே அரங்கேறிய உயிர் காப்பு இன்னிசை நிகழ்ச்சியின் மனம் குளிரும் செய்தியினை உள நிறைவுடன் இங்கு பகிர்ந்து கொள்வதில் பேருவகை கொள்கின்றேன்.

உலகறியும் வண்ணம் திரு. செந்தில் குமரன் அவர்களின் நிவாரணம் எனும் உயிகாப்புச் செயல்த் திட்டங்களின் ஓர் அங்கமான இவ்வாண்டிற்கான "MGR 110" எனும் இனிமை பொங்கும் இன்னிசை நிகழ்ச்சியானது கடந்த காலங்களை விடவும் இவ்வாண்டு புதிய பரிணாமத்துடன் வெற்றிகரமாக நிகழ்ந்தேறியது, நெஞ்சத்தை மகிழ்ந்துருக வைத்தது.

வெற்றிக்கு காரணம்

இந்த நீள்பயனத்தின் வெற்றிக்கு காரணம் திரு செந்தில் குமரனின் வெளிப்படைத்தன்மையும், இந்த பாரிய பணியின் அனைத்து நிர்வாக மற்றும் பிற செலவுகளையும் தானே ஏற்று கொண்டு, மக்களிடம் பெறப்படும் நூறு வீதமான நிதியினையும் ஒளிவு மறைவின்றி அந்த மக்களின் கைகளுக்கே சென்றடையும் வகையில் சான்றுகளுடன் பொதுவெளியில் அனைவரும் காணும் வண்ணம் வெளிப்படுத்துவதேயாகும்.

பத்து நிமிடத்தில் ஐம்பதினாயிரம் டொலர்கள் வழங்க வரிசை கட்டி நின்ற மக்கள்! செந்தில் குமரனின் இசை நிகழ்ச்சிகள் மனதை உருக்கிய மனித நேயம் | People Lined Contribute Fifty Thousand Dollars

கொடையுணர்வின் தாகத்தால் பொங்கிப் பிரகவிக்கும் இதயங்களைத் தாங்கி வந்த அன்புத் தமிழ்ச் சொந்தங்கள், இசையின்பத்தில் நனைந்தவாறு விழிநீர் சொரிய தாயக மக்களின் சொல்லொணா வாழ்வியல் அவலங்களை மனதில் சுமந்து அவற்றிற்கான பணவுதவியினை தாராள மனதுடன் அள்ளி வழங்கிய காட்சி, கண்ணீர் மல்க வைக்கும் கண்கொள்ளாக் காட்சி என்றால் மிகையல்ல.

கோடை காலம் ஆனதும் உள்ளூர் வெளியூர் ஐரோப்பிய ஆசிய சுற்றுலாக்கள் தொட்டு, மனதிற்கு அமைதி தரும் கோயில் திருத்தல யாத்திரைகள் என தாயகம் வரை கால் பதித்து, எமது சுய ஆசா பாசங்களை நிறைவு செய்வோம்.

பத்து நிமிடத்தில் ஐம்பதினாயிரம் டொலர்கள் வழங்க வரிசை கட்டி நின்ற மக்கள்! செந்தில் குமரனின் இசை நிகழ்ச்சிகள் மனதை உருக்கிய மனித நேயம் | People Lined Contribute Fifty Thousand Dollars

இந்த அந்நிய தேசத்து இயந்திர வாழ்வின் மனப் பாரங்களை இறக்கி வைத்து ஆறுதல் அடையும் வகை இவையாவும். சாதாரண மனித வாழ்வியலில் தவிர்க்க முடியாதவைகள் என்பதில் மறு வார்த்தை இருப்பதற்கில்லை.

நீண்ட வார இறுதி விடுமுறைகள்

இவை தவிர வசந்த காலத்திலிருந்து உறைபனிக் காலம் வரை தொடர்ச்சியாக மொழி சார்ந்தும், சமயங்கள் சார்ந்தும் உள் வெளி அரங்க ஆய்வுகள் பட்டி மன்றங்கள் வரை, தமிழக சினிமாப் பிரபலங்கள் சுப்பர் சிங்கர் பாடக பாடகிகள் இசை மேதைகள் நடிக நடிகைகள் என நீண்ட வார இறுதி விடுமுறைகள் அனைத்தும் தெரு விழாக்களால் பெரு விழாக்களாக நிறைய முழு சமூகமுமே குதூலிப்பும் கழியாட்டங்களுமாக உண்டு குடித்து மகிழ்ந்து ஆடிப் பாடி இன்பப் பரவசங்களில் ஆழ்ந்து மூழ்கியுமிருப்போம்.

இவ்வாறாக எமது சுய விருப்பின் நிமித்தம் எமது வாழ்வை இத்தனை பொருட் செலவுகளின் மத்தியில் அனுபவித்து இன்புறும் அதே வேளையில், தாய் மண்ணில் எவருக்கும் கேட்காத குரல்களாய், வெறுங்கைகளுடன் அன்றாட வாழ்விற்காகவும் உயிர் பிழைக்கும் நோய் பிணியிலிருந்து தப்பிப் பிழைக்கும் மருத்துவ தேவைகளுக்காகவும் அழுது நெக்குருகி வாடி வதங்கி ஓலமிடும் எமதருமை உடன் பிறவா ஏதிலிச் சொந்தங்களின் துயர் துடைக்க, ஆண்டுதோறும் தொடர்ச்சியாக நடத்தப்படும் செந்தில் குமரனின் MGR இசை நிகழ்ச்சிகள், மனித நேயம் கொண்ட மக்களை ஒன்று திரட்டி தாயக மக்களின் உயிர்களை காக்கும் ஒரு கலங்கரை விளக்கமாக ஒளிர்கிறது, நம்மத்தியில் இறைவன் இருக்கிறான் என்பதற்கான ஒரு கட்டியம் கூறலாகவே தெரிகிறது.

பத்து நிமிடத்தில் ஐம்பதினாயிரம் டொலர்கள் வழங்க வரிசை கட்டி நின்ற மக்கள்! செந்தில் குமரனின் இசை நிகழ்ச்சிகள் மனதை உருக்கிய மனித நேயம் | People Lined Contribute Fifty Thousand Dollars

பிரமிக்கும் வகையில் மக்களை மெய்மறக்க வைத்து கொண்டிருந்த வேளையில், இந்நிகழ்ச்சியின் நடுப்பகுதியில் திரு.செந்தில் குமரன், இந்த நிதி சேகரிப்பு ஏழ்மை நிலையிலுள்ள நோயாளிகளுக்கான இதய சத்திர சிகிச்சைக்கு மட்டுமின்றி, மலையகப்பகுதிகளில் குருதி சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாமல், அதுவும் சில நோயாளிகள் ஒன்றை விட்ட ஒரு நாள் 12 மணி நேர பயணம் செய்து குருதி சுத்திகரிப்பை பெற்று கொள்ளும் அவலத்தை நெஞ்சுருகும் வகையில் கூறினார்.

பத்து நிமிடத்தில் ஐம்பதினாயிரம் டொலர்கள் வழங்க வரிசை கட்டி நின்ற மக்கள்! செந்தில் குமரனின் இசை நிகழ்ச்சிகள் மனதை உருக்கிய மனித நேயம் | People Lined Contribute Fifty Thousand Dollars

அதன் பின் அங்கிருந்து கிடைக்க பெற்ற நோயாளி குடும்பத்தினரின் காணொளி ஒன்றும் ஒளிபரப்பப்பட்டது.

லையகம் நோக்கிய மருத்துவ உதவித் திட்டம்

அதன் தொடர்ச்சியாக டிக்கோயா மருத்துவமனையில் குருதி சுத்திகரிப்பு நிலையத்தினை வழங்கி வைப்பதற்கான நிதி தேவை என்ற நோக்கத்தில் அடுத்த பாடலை தான் பாடும் போது பார்வையாளர்கள் எவரேனும் தானம் தர விரும்பின் ஐநூறு டொலர்களை தந்து தீபத்தை ஏற்றி அவர்கள் வாழ்வில் ஒளியினை கொண்டு வருமாறு வேண்டி தனக்கே உரித்தான கம்பீரக் குரலில் "இசை கேட்டால் புவி அசைந்தாடும்" என்ற பாடலைப் பாட ஆரம்பித்ததும், அங்கு இருமருங்கிலும் அமைக்கப் பெற்றிருந்த விளக்கேற்றும் தீப பீடங்களை நோக்கி மக்கள் தாரை தாரையாக வரிசைகட்டிய மனம் படைத்த மக்கள் குழாம் 500 டொலர்கள் பெறுமதியான விளக்குகளை ஏற்றி தமது மனிதக் கடன்களை வெளிப்படுத்திய அருங்காட்சியானது காண்போர் கண்களைக் குளமாக்கின.

பத்து நிமிடத்தில் ஐம்பதினாயிரம் டொலர்கள் வழங்க வரிசை கட்டி நின்ற மக்கள்! செந்தில் குமரனின் இசை நிகழ்ச்சிகள் மனதை உருக்கிய மனித நேயம் | People Lined Contribute Fifty Thousand Dollars

நான் நினைக்கிறேன், அந்த ஒரே பாடல் முடிவதற்கிடையில் அவரது கையில் உள்ள அடுத்த மலையகம் நோக்கிய மருத்துவ உதவித் திட்டமான அறவே வசதிகளற்ற "டிக்கோயா" எனும் ஒரு மலையக ஊரில் நிவாரணத்தால் நிறுவ திட்டமிட்டிருக்கும் இரண்டு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் அடங்கலாக ஒரு புதிய "குருதி சுத்திகரிப்பு நிலையத்தையே நிமானிப்பதற்கான ஒரு பாரிய தொகையினை செந்தில் அவர்களின் மனித நேயம் தனதாக்கிக் கொண்டிருந்தது என்பது கண்கூடு என்பேன்.

உலகளாவிய ரீதியில் எம்மில் பலர் பாரிய பொருளாதார சிக்கல்களை எதிர் கொண்டிருந்தாலும், தொப்புள் கொடி உறவுகளின் உயிர்கள் காக்க தேவையென்னும் பட்சத்தில் இரண்டாம் முறை நினைத்து பாராமல் செந்தில் குமரனின் கோரிக்கையினை ஏற்று கொடை வழங்கிய ஏராளமான புரவலர்களின் விவரமும் நிதி தொகையும், அதனோடு சேர்ந்து வந்த நெஞ்சினை தொடும் வாக்கியங்களும் அங்கிருந்த பெரிய திரையில் ஓடி கொண்டிருந்தது. அவை பார்வையாளர் பலரை உருக செய்து அவர்களை விளக்குகளின் பக்கம் நகர்த்தி சென்றன என்றால் மிகையாகாது.

பத்து நிமிடத்தில் ஐம்பதினாயிரம் டொலர்கள் வழங்க வரிசை கட்டி நின்ற மக்கள்! செந்தில் குமரனின் இசை நிகழ்ச்சிகள் மனதை உருக்கிய மனித நேயம் | People Lined Contribute Fifty Thousand Dollars

குறிப்பாக, இரு கொடை வழங்குனர், முழு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களுக்கு தேவையான தலா 15000 டொலர்களையும் , மூன்று கொடை வழங்குனர், முழு இதய சத்திர சிகிச்சைகளுக்காக செலவான 7000 டொலர்களை வழங்கியது சபையோரை வியப்பிலும் மகிழ்ச்சி கடிலிலும் ஆழ்த்தியது தொடர்ச்சியாக பிரபல பாடகி சுசீலாவின் ஆண்டவனே உன் பாதங்களில் என்ற பாடலை எங்கள் நாட்டு சூப்பர் சிங்கர் மகிஷா பாடியதும், அதன் பின்னர் வித்யாஷங்கர் மற்ற பாடகர்களுடன் பாடிய மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்ற பாடலும் பார்வையாளர்கள் மனதை உருகியதோடு மட்டும் நில்லாமல் விளக்குகளை ஏற்ற உரமிட்டு கொண்டிருந்தது என்று சொல்லலாம்.

அத்தோடு அண்மையில் தமிழக சினிமாத்துறையில் பல்கலை வித்தகர்களாக இருந்து மறைந்த இயக்குனர் சிகரம் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜ் போன்றோரை நினைவு கூரும் வகையில் அவர்கள் திரைகளிலிருந்தும் புகழ் பெற்ற சில பாடல்களையும், இறுதியாக அண்மையில் திடீரென நம்மை விட்டுப் பிரிந்த "கானா புகழ் இசை அமைப்பாளர் மற்றும் பாடக வல்லுனர் "தேவா" அவர்களின் புகழ் பெற்ற "சலோமியா" என்ற பாடலையும் திரு.செந்தில் குமரன் அவர்கள் அதே தேவாவின் குலை தன் குரலால் பிரதி செய்து பாடியதானது இந்த இசைக் கதம்பத்தின் முத்தாய்ப்பாய் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தாயக மக்கள்

வழமை போலவே கனேடிய மண்ணில் பிரசித்தி பெற்ற உயிர்காப்புப் பணிகளில் தம்மை என்றும் போல் அர்ப்பணித்து வரும் மனிதநேயம் படைத்த இசைக் குழுவினராகிய "Latha Brothers" இசைக் குழுவினரும் கூடவே பல ஆண்டுகளாக தொடர்ந்து பணிக்கும் பாடகர்களாகிய சிவா, வித்யாசங்கர், சந்தியா, சின்மயி, விஜிதா, மகிஷா, மானசி மற்றும் இவர்களுடன் பொப்பிசைப் பாடகர் பாபு ஜெயகாந்தன் அவர்களும், கூடவே எவர் குரலையும் மிமிக்கிரி செய்து பாடக்கூடிய திரு.செந்தில் குமரனுமாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அரங்கு ஒரு பேரிசைப் புயல் அரங்காக செவிகளுக்கு மட்டுமல்ல, விழிகளுக்கும் வித வித ஆடைகள் பூண்டு வண்ண வண்ண விளக்குகளுமாய் இசைக்கூடமே இன்ப மயமாய் மனதை அள்ளிய அழகு கொள்ளை அழகே. அலை மோதிய மக்கள் வரவின் அதிகரிப்பால் வாகன தரிப்பிடங்கள் இல்லாது அருகே காணப்பட்ட குடி மனைப் பகுதிகளிலும் பிற பிரதான தெருவோரங்களிலும் தரிப்பிடத்திற்காய் ஆங்காங்கே காத்து நின்ற நிலையானது வாழும் வகையற்ற தாயக மக்கள் மீது அவர்கள் காட்டும் பாச உணர்வுகளையே வெளிப்படுத்தி நின்றன எனலாம்.

பத்து நிமிடத்தில் ஐம்பதினாயிரம் டொலர்கள் வழங்க வரிசை கட்டி நின்ற மக்கள்! செந்தில் குமரனின் இசை நிகழ்ச்சிகள் மனதை உருக்கிய மனித நேயம் | People Lined Contribute Fifty Thousand Dollars

நிகழ்ச்சி 11:00 மணியாகிய நிறைவுப் பகுதியை அடைந்த பின்னும் இசை ரசிகர்கள் வீடு செல்ல மனமின்றி இருக்கைகளிலேயே மிக அமைதியாக அமர்ந்தே இருந்தமையானது அந்நிகழ்ச்சி மூலம் தாயக பயனாள மக்கள் மீதும் அவர்தம் நல்வாழ்வு மீதும் அவர்கள் கொண்டிருந்த ஆத்மார்த்த கருணையையும் பற்றுதலையுமே பிரதிபலிப்பதை ஐயம் திரிபடக் கூறிடலாம். நிவாரணம் என்கின்ற இந்நிகழ்வில் பெற்ற முழு அழவிலான அடைவுகள் பலாபலன்கள் நன்மைகள் பற்றி மிகத்துல்லியமாக திரு.செந்தில் குமரனின் அறிக்கைகள் மூலம் அனைவரும் அறியும் வண்ணம் பொதுவெளியில் கண்டு கொள்ளலாம்.

பத்து நிமிடத்தில் ஐம்பதினாயிரம் டொலர்கள் வழங்க வரிசை கட்டி நின்ற மக்கள்! செந்தில் குமரனின் இசை நிகழ்ச்சிகள் மனதை உருக்கிய மனித நேயம் | People Lined Contribute Fifty Thousand Dollars

இவ்விழாவின் மகிமையையோ அன்றி இன்னமும் பங்களிக்கும் அவாவினையோ நீங்கள் கொண்டிருப்பின் திரு.செந்தில் குமரனது வலைத்தளங்கள் மூலம் தொடர்புகளை மேற்கொண்டு நீங்களும் அந்த இறை பணியின் பங்காளர்களாகலாம்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US