உங்களை போன்றவர்களே கைது செய்யப்பட வேண்டும்! சார்ள்ஸை பார்த்து கூறிய அமைச்சர்
நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் ஏற்பட்டதால், கைது செய்ய வேண்டியவர்கள் உங்களை போன்றவர்கள் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனை பார்த்து கூறியுள்ளார்.
தமிழ் பிள்ளைகளின் மனங்களை மாற்றும் வேலைகளை செய்யும் நடவடிக்கைகளுக்கான பொறுப்பை நிர்மலநாதன் போன்றவர்களே ஏற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவது போல் தமிழ் இனப்படுகொலை எங்கு நடந்தது. தமிழ் மக்களில் 52 வீதமானவர்கள் வடக்கு, கிழக்குக்கு வெளியில் சிங்கள சமூகத்துடன் வாழ்கின்றனர்.
தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்றால், இவ்வாறு சிங்கள மக்களுடன் வாழ முடியுமா எனவும் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.




