வல்வெட்டித்துறை திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது (Photos)
வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தரின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் இடம்பெற்ற திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் 16 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 பேர், மன்னாரைச் சேர்ந்த 2 பேர் மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த ஒருவர் என 7 பேர் காங்கேசன்துறை குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 20ஆம் திகதி வல்வெட்டித்துறையில் நடந்த களவுச் சம்பவத்தில் ஐந்தரை இலட்சம் ரூபாய் பணமும் 16 பவுண் நகைகளும் களவுபோயுள்ளது.
நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
குறித்த களவில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர் 19 வயதான போதைக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது போதைக்கு அடிமையான திருட்டில் ஈடுபட்ட ஒருவர், நகை அடகு வைத்தவர், நகையை உடமையில் வைத்திருந்தவர்கள் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், விசாரணைகளுக்கு பின்னர் சந்தேகநபர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
