மன்னாரில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டும் மக்கள்!
மன்னார் மாவட்டத்தில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கோவிட் தொற்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை 2வது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் அதிக எண்ணிக்கையான மக்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டியுள்ளனர்.
மன்னார் ஆடைத்தொழிற்சாலை பிரதான வீதியில் அமைந்துள்ள பொது மண்டபத்தில் தடுப்பூசி 2வது நாளாகவும் செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது கிராம அலுவலகர் பிரிவுகள் ஊடாக ஒதுக்கப்பட்ட நேரங்களுக்கு அமைய செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை இன்றைய தினம்(6) நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவிலும், முருங்கன் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam

பிரித்தானியாவில் துப்பாக்கி மூலம் குடும்பத்தை அச்சுறுத்திய நபர்: 4 மணிநேர போராட்டத்தில் சுட்டுப்பிடிப்பு News Lankasri
