இலங்கையில் 6.3 மில்லியன் மக்களின் நிலைமை மோசமடையும்! சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்
இலங்கையில் குறைந்த பட்சம் 6.3 மில்லியன் மக்கள் இன்னமும் மிதமான மற்றும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர் எனவும் போதுமான உயிர்காக்கும் உதவி மற்றும் வாழ்வாதார ஆதரவு வழங்கப்படாவிட்டால் அவர்களின் நிலைமை 2023 இல் மோசமடையும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கங்களின் கூட்டமைப்பின் தகவல்படி, இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் இன்னும் அதிகமாக இருப்பதாகவும், நெருக்கடி விரைவில் நீங்காது, நீண்டு கொண்டே போகும் என்றும், மக்களின் நிலைமை சீராக மோசமடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
60 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் குறைவாகவே சாப்பிடுகின்றன
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியானது சமூகத்தின் அனைத்துத் துறைகளையும் பாதித்துள்ளதுடன், கணிசமான மக்கள் தொகையில் பாதிப்பு, வறுமை மற்றும் ஏழ்மை நிலையை அதிகரிப்பதற்கான நிலைமைகளை உருவாக்கியுள்ளது என்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
60 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் குறைவாகவே சாப்பிடுகின்றன, மேலும்
மலிவான, குறைந்த சத்துள்ள உணவை சாப்பிடுகின்றன என்றும் சர்வதேச செஞ்சிலுவைச்
சங்கம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
