வீட்டை சுற்றி காணப்படும் பாம்புகள்: யாழ். பாதுகாப்பு நிலையத்தில் உள்ள மக்கள் கவலை
வீட்டை சுற்றி பாம்புகள் காணப்படுவதோடு வெள்ளமும் வற்றாமல் இருப்பதால் வீட்டுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளதாக வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் தங்கியுள்ள மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வெள்ள அனர்த்தம் காரணமாக வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 அங்கத்தவர்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ளனர்.
இவர்கள் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட, ஜே/57 கிராம சேவகர் பிரிவில் வசிப்பவர்கள் ஆவர்.
மக்கள் கோரிக்கை
தமது வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதாகவும், வீட்டை சுற்றி பாம்புகள் உள்ளதாகவும் கூறுகின்ற அவர்கள், இவற்றை எல்லாம் சீர்செய்து வழங்கினால் மட்டுமே தங்களால் வீடுகளுக்கு செல்ல முடியும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த பிரச்சனை ஒவ்வொரு வருடமும் இடம்பெறுவதாகவும், இதற்கு ஒரு தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri