கடற்றொழில் அமைச்சரின் சகா என கூறியவரால் யாழில் பரபரப்பு
கடற்றொழில் நீரியல் வள அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திய தனி நபர் ஒருவர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் களஞ்சியசாலை ஒன்றைத் தான் கொண்டுவந்த பூட்டு ஒன்றினால் பூட்டித் திறப்பை எடுத்துச் சென்ற சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் யாழ். பருத்தித்துறை, முதலாம் குறுக்குத் தெரு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, பருத்தித்துறை முதலாம் குறுக்குத் தெருப் பகுதியில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள களஞ்சியசாலை ஒன்றுக்கு வந்த நபர் ஒருவர், அங்கிருந்த படி களஞ்சியசாலையின் காப்பாளருக்குத் தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார்.
அமைச்சரின் ஒரிங்கிணைப்பாளர்
தன்னைக் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் என்று அறிமுகப்படுத்திய பின் அடாவடியில் அவர் ஈடுபட்டதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.

எவ்வித நடைமுறைகளையும் பின்பற்றாமல் தான் எடுத்துக்கொண்டு வந்த பூட்டைக் களஞ்சியசாலையில் பூட்டிய பின்னர் அதன் திறப்புகளைத் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார்.
இதன்படி இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களப் பிரதிப் பணிப்பாளரால் ஜனாதிபதி செயலகத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்படி முறைப்பாடு கிடைத்து ஒரு மணி நேரத்தினுள் சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சருக்கும், சம்பந்தப்பட்ட நபருக்கும் அறிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து வேறு நபர்கள் களஞ்சியசாலைக்கு அனுப்பப்பட்டு, சட்டவிரோதமாகப் பூட்டப்பட்ட பூட்டு மீளப்பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri
ரஜினி படத்திலிருந்து வெளியேறிய சுந்தர் சி.. அடுத்ததாக இயக்கப்போகும் படம் இதுதான்.. ஹீரோ யார் தெரியுமா? Cineulagam