புத்தளம் - முள்ளிபுரத்தில் பொலிஸ் நிலையத்திற்கு வெளியே ஒன்றுகூடிய மக்கள்
புத்தளம் - முள்ளிபுரம் பகுதியில் போதைப் பொருள் வியாபாரத்தைத் தடுப்பதற்காக மக்கள் நேற்று இரவு ஒன்று கூடியதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
புத்தளம் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட முள்ளிபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் வியாபாரம் அதிகரித்து வருவதினால் அப்பகுதி மக்கள் நேற்று இரவு போதைப் பொருள் வியாபாரம் செய்கின்றவரின் வீட்டிற்குச் சென்று அதனை நிறுத்துமாறு மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த மக்கள், வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்து தனது மனைவி மற்றும் பிள்ளைகளைத் தாக்கியதில் மனைவி காயங்களுக்கு உள்ளாகி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போதைப்பொருள் வியாபாரி புத்தளம் பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து அப்பகுதி மக்களும் புத்தளம் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்வதற்கு சென்ற வேளை பொலிஸார் இருவரை மாத்திரம் முறைப்பாடு செய்யுமாறு கூறி இருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் நின்ற மக்கள் அனைவரையும் முறைப்பாடு
செய்ய அனுமதிக்க வேண்டுமென கூறி பொலிஸாருடன் வாக்கு வாதத்தில்
ஈடுபட்ட நிலையில் அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாக தெரியவருகிறது.






