யாழ்ப்பாணம் - பருத்தித்துறையை சேர்ந்த இருவர் காரைக்காலில் கைது
இந்தியாவின் புதுச்சேரி காரைக்காலில் வைத்து இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், பருத்தித்துறையை சேர்ந்த குறித்த இருவரும் கஞ்சா போதைப்பொருளை இலங்கைக்கு எடுத்துச்செல்வதற்காக பைபர் படகு ஒன்றின் மூலம் காரைக்காலுக்கு சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பணம்
அவர்களிடம் இருந்து 50000 இந்திய ரூபா மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
விசாரணைகளின் பின்னர் அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கடந்த மாதமும் இதுபோன்ற சம்பவம் ஒன்றில் திருகோணமலை மற்றும் வவுனியாவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து சுமார் 300 கிலோகிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



