மக்கள் கோபத்தில் எடுத்த முடிவே தேர்தல் பெறுபேறுகள்
மக்கள் கோபத்தில் எடுத்த முடிவே இந்த தேர்தல் பெறுபேறுகளாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
வாக்களித்தவர்கள் மிகவும் ஆழமாக சிந்தித்து வாக்களிக்கவில்லை எனவும் கோபத்தினால் எடுக்கப்பட்ட முடிவு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
மோசமாக காணப்படும் பொருளாதார நிலைமை
நாட்டின் பொருளாதார நிலைமை மோசமாக காணப்படுவதாகவும் புதிய ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினர் பெரும் சவால்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த தேர்தல் முடிவுகள் குறித்து அதிருப்தி அடையவில்லை எனவும் மக்களின் எதிர்ப்பு வெளிப்பாடாக இந்த வாக்களிப்பினை அவர் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஒட்டுமொத்த அரசியலின் மீதான வெறுப்பின் வெளிப்பாடே இந்த தேர்தல் முடிவு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து இன்று சஜித் பிரேமதாச தலைமையில் கட்சி உறுப்பினர்கள் கலந்துரையாடியதாகவும், சஜித் பிரேமதாச தலைமையில் விரிவான கூட்டணி ஒன்றை அமைக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

வீட்டைவிட்டு கிளம்பும் முன் கோமதிக்காக மீனா செய்த காரியம், ஆனால் செந்தில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
