யாழில் படைப்பிரிவினால் விடுவிக்கப்பட்ட காணிகள்: ஆர்வத்துடன் பார்வையிட்ட மக்கள்
யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படைப்பிரிவினால் கையகப்படுத்தப்பட்டிருந்த 67.3 ஏக்கர் மக்களது காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் ஆர்வத்துடன் தமது காணிகளை பார்வையிட்டு வந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை J/235, தென்மயிலை J/ 240 ஆகிய கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட பகுதி காணிகளை, மக்கள் பார்வையிடுவதற்கான ஒழுங்கமைப்பு வசதிகளை வலிகாமம் வடக்கு பிரதேச செயலகம், கிராம சேவையாளர்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
சிரமதானப் பணி
இதில் விடுவிக்கப்பட்ட காணிகளையும், வீடுகளையும் மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டதுடன் தமது காணிகளின் எல்லைகளையும் அடையாளப்படுத்தியதுடன் சிரமதானப் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பாதுகாப்பு படையினரிடம் இருந்த 67.3 ஏக்கர் நிலப்பரப்பினை விடுவித்து தந்த ஜனாதிபதிக்கும் முப்படைத் தளபதியினருக்கும் மக்கள் நன்றியினை தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






