முல்லைத்தீவு உப்புமாவெளியில் கடற்கரை வீதியை புனரமைக்க கோரும் மக்கள்

Mullaitivu Sri Lankan Peoples Northern Province of Sri Lanka
By Uky(ஊகி) Feb 08, 2024 01:49 AM GMT
Uky(ஊகி)

Uky(ஊகி)

in சமூகம்
Report
Courtesy: uky(ஊகி)

முல்லைத்தீவு உப்புமாவெளியில் உள்ள 4ம் கட்டை சுடலை வீதியை (கடற்கரை) புனரமைத்து தருமாறு மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தவண்ணமுள்ளனர்.

இடைவிடாது தொடர்ந்து பல தரப்பினருடனும் தங்கள் கோரிக்கையை முன்வைத்து வீதிப்புனரமைப்புக்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆய்வுப் பணிகளில் உரிய தரப்பினர் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதும் இதுவரை புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு உப்புமாவெளியில் கடற்கரை வீதியை புனரமைக்க கோரும் மக்கள் | People Demanding Reconstruction Of Beach Road

வீதியை மூடிய வெள்ள நீர் பாதையின் இரண்டு இடங்களில் பயனங்களுக்கு இடையூறை ஏற்படுத்தியவாறு இருக்கின்றன.

பாதையின் தேவை 

முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியில் முல்லைத்தீவில் இருந்து ஐந்து கிலோமீற்றர் தூரத்தில் உள்ள 4 ம் கட்டைச் சந்தியில் இருந்து கிழக்கே கடற்கரை நோக்கிய பாதையாக இது இருக்கின்றது.

முல்லைத்தீவில் இருந்து ஆரம்பமாகும் தெற்குநோக்கிய கடற்கரைச் சாலையை இது இணைத்து கரையோரப் பயனங்களுக்கு உதவியாக அமையுமாறு தளவமைப்பினை இந்த பாதை கொண்டுள்ளது.

முல்லைத்தீவு உப்புமாவெளியில் கடற்கரை வீதியை புனரமைக்க கோரும் மக்கள் | People Demanding Reconstruction Of Beach Road

ஒரு கிலோ மீற்றரிலும் சற்றுக் கூடிய நீளத்தினைக் கொண்டுள்ள இந்த பாதை மக்களிற்கு அவசியமானதாக அமைந்து விடுகின்றது.

இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதற்கான சுடலைக்குச் செல்லும் பாதையாக இது இருக்கின்றது.உடுப்புக்குளம், உப்புமாவெளி, துண்டாய் வடக்கு , அளம்பில் தெற்கு,கொத்தியகாமம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களைக்கான சுடலைக்குச் செல்லும் பிரதான பாதையாக இது அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

புதிய குடியிருப்புக்கான நிலம் 

துண்டாய் வடக்கு கிராமத்திற்கு வடக்கு திசையில் அமையவிருக்கும் புதிய குடியிருப்புக்கான பாதையாகவும் இந்த பாதையே அமைந்துள்ளது. புதிய குடியிருப்புக்கான வீட்டுத் திட்டங்களின் போது அதற்கான கட்டிடப் பொருட்களை கொண்டு செல்வதும் மற்றும் மக்களின் பயணங்களும் இந்த பாதைவழியே தான் மேற்கொள்ள வேண்டும் என உடுப்புக்குளம் அபிவிருத்திச் சங்கம் சார்பாக பேசவல்ல சமூகச் செயற்பாட்டாளர் ஆனந்தன் குறிப்பிட்டிருந்தார்.

முல்லைத்தீவு உப்புமாவெளியில் கடற்கரை வீதியை புனரமைக்க கோரும் மக்கள் | People Demanding Reconstruction Of Beach Road

புதிய குடியிருப்புக்கான நிலங்களை வழங்குவதற்கு இந்த பாதைவழியே அமைந்துள்ள கடற்கரையை அண்டிய நிலத்தொகுதியே தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உப்பாமாவெளி கிராமசேவகர் குறிப்பிட்டிருந்தார்.

முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியின் 4ம் கட்டை சுடலை வீதி பல்நோக்கு அடிப்படையில் அதிக பயன்பாடுமிக்க வீதி என்பதும் அது புனரமைக்கப்பட வேண்டும் என்பதும் உரிய எல்லாத் தரப்புக்களாலும் உணரப்பட்டுள்ள விடயமென கிராமத்தின் சமூக விடய ஆய்வாளரும் எழுத்தாளருமான ஒருவரிடம் மேற்கொண்ட கருத்துக் கேட்டல்களின் போது குறிப்பிட்டிருந்தமையும் நோக்கத்தக்கது.

முல்லைத்தீவு உப்புமாவெளியில் கடற்கரை வீதியை புனரமைக்க கோரும் மக்கள் | People Demanding Reconstruction Of Beach Road

பாதையின் தற்போதைய நிலை

ஒரு கிலோமீற்றரிலும் சற்றுக்கூடிய நீளம் கொண்ட இந்த பாதையில் பாதித் தூரத்திற்கும் கூடிய தூரம் மழைக்காலங்களில் பயன்படுத்த முடியாது போய்விடுகின்றது.

உப்புமாவெளி வில்லுக்குளத்தில் சேரும் நீர் வில்லின் கொள்ளளவிலும் அதிகரிக்கும் போது வீதியை மேவி பயணம் செய்ய முடியாதபடி வீதியை மூடிக் கொள்கின்றது.

2023 ஆம் ஆண்டில் மாரிகாலத்தில் ஏற்பட்ட கடும் மழைப்பொழிவினால் நாலடிக்கும் கூடிய உயரத்திற்கு; 600 மீற்றர் தூரத்திற்கு நீர் பாதையை மேவியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த மழையில் சேர்ந்த வெள்ளம் இன்னுமும் பாதையின் 75 மீற்றர் தூரமளவிற்கு பாதையை மூடியுள்ளமையையும் அவதானிக்க முடிகின்றது.

முல்லைத்தீவு உப்புமாவெளியில் கடற்கரை வீதியை புனரமைக்க கோரும் மக்கள் | People Demanding Reconstruction Of Beach Road

பாதையின் உயரத்தினை இன்னும் அதிகமாக்க வேண்டும்.அப்போது தான் மழைக்காலங்களில் வில்லுக்குளத்தில் நீர் அதிகரிக்கும் போது பாதையை வெள்ளம் மூடாதிருக்கும் என உப்புமாவெளி கிராமசேவகர் பாதையின் தற்போதைய நிலைபற்றிக் குறிப்பிட்டிருந்தமையும் நோக்கத்தக்கது.

இறந்தவர்களின் உடலங்களை தகனத்திற்காகவும் நல்லடக்கத்திற்காகவும் தண்ணீரூக்குள்ளாலேயே கொண்டு செல்ல நேர்ந்ததாக சமூகச் செயற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.இந்த மாதத்தில் மூன்று முதியவர்கள் நோய் மற்றும் மூப்பின் காரணமாக இறப்பினைச் சந்தித்தனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பாதையை புனரமைக்க கோரும் முயற்சி

கிராம அபிவிருத்தி சார் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூட்டாக இணைந்து கிராம சேவகரின் வழிகாட்டலுக்கமைய செயற்பட்டுவருவதாக கிராம மக்களிடையே மேற்கொண்ட தேடல்களின் போது அறிய முடிகின்றது.

பலதடவை கரைதுறைபற்று பிரதேச செயலகத்தின் கவனத்திற்கு இந்த பாதை தொடர்பில் கொண்டு சென்றுள்ளதாக கிராம சேவகரும் கிராம அபிவிருத்தி சங்கத்தினரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு உப்புமாவெளியில் கடற்கரை வீதியை புனரமைக்க கோரும் மக்கள் | People Demanding Reconstruction Of Beach Road

மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்களின் கவனத்திற்கும் இந்தப் பாதையின் புனரமைப்புத் தொடர்பில் முன்கொண்டு சென்றுள்ளதாகவும் யாரிடமிருந்தும் உறுதியான அபிவிருத்திக்கான உடன்பாடு இதுவரையும் பெறமுடியவில்லை எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

விரைவான புனரமைப்பை எதிர்ப்பார்க்கும் மக்கள் கடந்த இரு வருடங்களுக்கு மேலாக பாதையின் உயரத்தினை உயர்த்தி பாதையில் உள்ள பாலங்களை அகலமாக்கி புதிய கட்டமைப்பை உருவாக்கி பாதையை புனரமைப்பதற்கு முயன்று கொண்டிருந்த போதும் இதுவரையும் அவர்களால் அந்த முயற்சியில் வெற்றிபெற முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உப்புமாவெளி கிராம சேவகர் பிரிவில் புனரமைக்க வேண்டிய பல பாதைகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உப்புமாவெளி கிராம சேவகர் பிரிவினால் உடுப்புக்குளம், உப்புமாவெளி, துண்டாய் வடக்கு ஆகிய கிராமங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றமை நோக்கத்தக்கது.

உடுப்புக்குளம் பாடசாலையில் இருந்து அளம்பில் வடக்கு நோக்கிய ஒரு கிலோமீற்றர் நீளமான பாதையும் மிகவும் கடுமையாக சேதமாகி பயணம் செய்யமுடியாதபடி இருக்கின்றது.

முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியில் 4 ம் கட்டை சந்தியில் இருந்து ஆரம்பமாகும் நரசிங்கர் கோவில் வீதியின் இரண்டு கிலோமீற்றர் தூரமுள்ள பாதையும் புனரமைப்புக்குரியதாக இருக்கின்றது. இந்த பாதையின் சிறிது தூரம் உடுப்புக்குளம் குளத்தின் நீரால் மேவப்பட்டு பயணிக்க முடியாதபடி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கரைதுறைபற்று பிரதேச செயலகத்தினால் பல வருடங்களாக இந்த பாதைகளின் அபிவிருத்தி தொடர்பில் கவனமெடுக்கப்படாது இருப்பது கவலைக்குரிய விடயமாகும் என அந்த பாதைகளை பயன்படுத்தி வரும் பொதுமக்கள் தங்கள் ஆதங்கங்ளை தெரிவித்திருந்தனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கதாகும். 

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Uky(ஊகி) அவரால் எழுதப்பட்டு, 08 February, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தெண்டாயுதபாணி உற்சவம்

4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில், கொழும்பு, மட்டக்களப்பு

15 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Markham, Canada

17 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Brampton, Canada

19 Aug, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாவலடி, Vitry-sur-Seine, France, Paris, France

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, Saint-Ouen-l'Aumône, France

18 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு

15 Aug, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-sur-Marne, France, Brou-sur-Chantereine, France

12 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

17 Aug, 2017
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பொல்காவலை, வாழைச்சேனை, புன்னாலைக்கட்டுவன், Edmonton, United Kingdom

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Gummersbach, Germany

14 Aug, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, Ilford, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US