விபத்துக்குள்ளான கொள்கலனிலிருந்து எரிபொருள் சேகரித்த மக்கள் (Video)
திருகோணமலையில் விபத்துக்குள்ளான எரிபொருள் கொள்கலன் வண்டியிலிருந்து மக்கள் எரிபொருள் சேகரித்துள்ளனர்.
திருகோணமலை ஐ.ஓ.சி எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து இன்று காலை 11 மணியளவில் ஹப்புத்தளை எரிபொருள் களஞ்சியசாலைக்கு எரிபொருளை ஏற்றி சென்ற வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து
எரிபொருள் கொள்கலன் வண்டி 33,000 லீற்றர் எரிபொருளை ஏற்றி செல்லும் போது ஹப்புத்தளை - பங்கெட்டிய பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
வீதி வழுக்கியமையே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேகரிப்பு
விபத்துக்குள்ளான எரிபொருள் கொள்கலனிலிருந்து பிரதேசவாசிகள் எரிபொருளை சேகரித்து செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

| போராட்டத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பொலிஸ் அதிகாரி கைது |
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
Spider-Man: Brand New Day முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே செய்துள்ள வசூல்... மாஸ் கலெக்ஷன் Cineulagam