அமைச்சர் லால் காந்தவுடன் மக்கள் நேரடியாகப் பேசலாம்! விசேட இலக்கம் அறிமுகம்
விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் மட்டத்தில் பொதுமக்கள் ஏதேனும் விடயங்களை அல்லது கோரிக்கைகளை முன்வைக்க விரும்பினால், தனது தொலைபேசி இலக்கத்துக்கு "குரல் வழிச் செய்தி" ஒன்றை அனுப்புமாறு அமைச்சர் லால் காந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர், பொதுமக்கள் நேரடியாகத் தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக 071 2473104 என்ற இலக்கத்தை வழங்கியுள்ளார்.
யுத்தம் நாளைக்கே முடிவுக்கு வந்தாலும் இலங்கை பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் ஒரே இரவில் நீங்கிவிடாது! நளிந்த
குரல் வழிச் செய்தி
குறித்த விடயங்கள் தொடர்பான தகவல்களை அல்லது முறைப்பாடுகளை இந்த இலக்கத்துக்குக் குரல் வழிச் செய்தியாக அனுப்பி வைக்குமாறும், அதன் மூலம் அமைச்சின் மட்டத்திலான தீர்வுகளை விரைவாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான நேரடித் தொடர்பைப் பேணுவதற்கும், அமைச்சின் செயற்பாடுகளைப் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.