ஈரானிய ஆட்சிக்கு எதிராக உலகெங்கும் மக்கள் எழுச்சி
ஈரானின் முன்னாள் மன்னரின் (Shah) மகனான ரஸா பஹ்லவி விடுத்த "உலகளாவிய போராட்ட நாள்" அழைப்பினை ஏற்று, சனிக்கிழமை அன்று உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கிப் போராடினர்.
ஜேர்மனியின் மியூனிக் நகரில் 250,000 பேரும், கனடாவின் ரொறொன்ரோவில் 350,000 பேரும் திரண்டனர்.
லொஸ் ஏஞ்சல்ஸ், லண்டன், சிட்னி மற்றும் டெல் அவிவ் போன்ற நகரங்களிலும் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
மியூனிக் நகரில் உரையாற்றிய பஹ்லவி, "ஈரானுக்குள் போராடும் வீரமிக்க மக்களே, நீங்கள் தனிமையில் இல்லை, உலகம் இன்று உங்களுடன் நிற்கிறது" எனத் தெரிவித்தார்.
ஈரானின் தற்போதைய ஆட்சியை "ஊழல் நிறைந்த, அடக்குமுறை மற்றும் குழந்தைகளைக் கொல்லும் ஆட்சி" என அவர் கடுமையாகச் சாடினார்.
அணுசக்தி பேச்சுவார்த்தைகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானியத் தலைவர்களுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளை நிறுத்த வேண்டும் என பஹ்லவியின் மகள் நூர் பஹ்லவி கோரிக்கை விடுத்தார்.

கடந்த டிசம்பர் 28 அன்று பொருளாதார நெருக்கடி காரணமாகத் தொடங்கிய உள்நாட்டுப் போராட்டங்களில், இதுவரை 6,800க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஈரானில் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டங்கள் பரவியுள்ள நிலையில், போராட்டக்காரர்கள் பலர் மீண்டும் பஹ்லவியின் தலைமையைக் கோரி முழக்கமிட்டு வருகின்றனர்.
1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு 50 ஆண்டுகள் கழித்து, ஈரானின் எதிர்காலத்தை வடிவமைக்க பஹ்லவி மீண்டும் முயற்சித்து வருகின்றார்.
எனினும், அவரது தலைமைத்துவம் உண்மையான ஜனநாயகத்திற்கு வழிவகுக்குமா என்ற கேள்வியையும் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர்.