குச்சவெளி பகுதியில் சமுர்த்தி கொடுப்பனவு கிடைக்கபெறாமையினால் மக்கள் அசௌகரியம்
திருகோணமலை - குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோணேசபுரி பிரதேச மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் சமுர்த்தி கொடுப்பனவு ஒவ்வொரு மாதமும் கிடைப்பதில்லை எனவும், மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு ஒரு முறையே இக்கொடுப்பனவு வழங்கப்படுவதாகப் பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இவ்வாறு வழங்கப்படும் சமுர்த்தி கொடுப்பனவை சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் திருகோணமலை நகர்ப்புறத்தில் உள்ள ஜின்னா நகர் காரியாலயத்தில் சென்று பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கோணேசபுரி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சமுர்த்தி காரியாலயம் சரியாக இயங்குவதில்லை எனவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாகக் கூலி தொழிலுக்குக் கூட செல்ல முடியாமல் கஷ்டப்படும் கோணேசபுரி மக்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் சமுர்த்தி கொடுப்பனவை உரிய நேரத்தில் வழங்குமாறு உரிய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிரித்தானியாவில் 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து: 65,000க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி News Lankasri
AI மூலம் 80-ஸ்க்கு சென்ற பிரபலங்கள்.. அதேபோல் நீங்களும் மாற இந்த Prompt-ஐ பயன்படுத்துங்கள் Cineulagam