பாதாள உலகக் குழுக்களுக்கு அஞ்சி வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளது
பாதாள உலகக் குழுக்களுக்கு அஞ்சி வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
செல்வந்த நாடு அழகிய எதிர்காலம் அமைத்துக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் பாதாள உலகக் குழுக்களுக்கு அஞ்சி வாழ வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் பாதாள உலகக் குழுக்களுக்கு அடிபணிந்து வாழும் நிலைமை தற்போதைய ஆட்சியின் கீழ் ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அனுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
