நாதன் ஓடையில் சட்டவிரோத மணல் அகழ்வால் மக்கள் பாதிப்பு - சுட்டிக்காட்டும் இம்ரான் எம்.பி
வெருகல் நாதன் ஓடையில் மணல் அகழ்விற்காக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் தமக்கு வழங்கப்பட்ட அளவிற்கு அதிகமாக சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாகவும், இதன் காரணமாக மாரி காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர் எனவும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
வெருகல் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று (17) பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது தனது பிரேரனைகளை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மணல் அகழ்விற்கு அனுமதி
மேலும் தெரிவிக்கையில், அனுமதி வழங்கப்பட்ட அளவிற்கு மேலதிகமாக மணல் அகழ்வதனையும், புதிதாக மணல் அகழ்விற்கு அனுமதி வழங்குவதனையும் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
எனவே, வெள்ளப்பெருக்கு, சுற்றாடல் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு வழங்கப்பட்ட அனுமதிக்கு மேலதிகமாக மணல் அகழ்வதனையும், புதிதாக மணல் அகழ்விற்கு அனுமதி வழங்காதிருப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்துச்சேனை பொது விளையாட்டு மைதானம் விளையாட முடியாத அளவிற்கு பள்ளமும், குழியுமாக காணப்படுகின்றது. இதன் காரணமாக இப்பகுதியிலுள்ள விளையாட்டு வீரர்கள் தமது விளையாட்டு திறமைகளை வெளிக்கொணரமுடியாத நிலையில் உள்ளனர்.
மைதானத்தை புனரமைத்து கொடுக்க நடவடிக்கை
மேலும் அருகிலுள்ள முத்துச்சேனை அரசினர் கலவன் பாடசாலையும் மேற்படி மைதானத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, முத்துச்சேனை கிராமத்திலுள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் முத்துச்சேனை அரசினர் கலவன் பாடசாலை மாணவர்களின் நலன்கருதி மேற்படி மைதானத்தை விளையாடுவதற்கு ஏற்ற வகையில் புனரமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெருகல் பிரதேச செயலக பிரிவின் எல்லை சரியாக அடையாளப்படுத்தப்படாமையினால் சேருவில பிரதேசத்தைச் சேர்ந்தவர்களினால் வெருகல் பிரதேசத்திலுள்ள காணிகள் அபகரிக்கும் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றது.
எனவே, வெருகல் பிரதேச செயலகத்திற்குரிய எல்லையினை நான்கு பக்கமும் அடையாளப்படுத்தி எல்லையிடுவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
